பேரணிக்கு அழைப்பு விடுத்தமை பொருத்தமானது – ட்ரம்ப்

13.01.2021 10:55:28

 

நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணிக்கு அழைப்பு விடுத்தமை முற்றிலும் பொருத்தமானது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியை முன்னெடுத்து தமது ஆதரவை வெளிப்படுத்துமாறு தனது ஆதரவாளர்களிடம் கடந்த 6 ஆம் திகதி அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனை அடுத்து, முன்னெடுக்கப்பட்ட பேரணியின் காரணமாக அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட அமைதியின்மையில் 5 பேர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.

எனினும் தனது கருத்து எந்தவிதத்திலும் தவறானது அல்ல என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்ற அமெரிக்க நாடாளுமன்றம் முன்னெடுத்துள்ள செயற்பாடு கண்டிக்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.