ஒரு வாரத்திற்குள் மூன்றாம் தொற்றலை உச்சத்தை தொடும் பிரான்ஸ் சுகாதார அமைச்சர் எச்சரிக்கை !

03.04.2021 09:14:05

இன்னமும் ஒரு வாரத்திற்குள் அல்லது பத்து நாளைக்குள், கொரோனாத் தொற்றின் மூன்றாம் தொற்றலை அதன் உச்சத்தை அடைந்துவிடும் என பிரான்ஸின் சுகாதாரம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கான அமைச்சர் ஒலிவியே வெரோன் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனத் தொற்று குறைவதற்கு முன்பாக, ஏப்ரல் மாதம் மிகவும் கடினமான, அதியுச்சக் கொரோனாத் தொற்று உள்ள மாதமாக இருக்கும்.

அதன் பின்னர் மேலும் இரண்டு வாரத்திற்குள் பிரான்சின் வைத்தியசாலைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளும் அதன் உச்சத்தை அடைந்து நிரம்பி, பெரும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இது ஏப்பரல் மாதத்தின் இறுதியில் ஏற்படும்.

இதனால் அதியுச்சமான திவீர சிகிச்சைக் கட்டில்களைத் தயார் நிலையில் வைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

பிரான்ஸில் 20 முதல் 30 மில்லியன் மக்கள் பலவீனமான நிலையில், தொற்று ஏற்படக் கூடிய நிலையில் உள்ளனர். அவர்களிற்கு முதலில் கொரோனத் தடுப்பூசிகளைப் போடுவதன் மூலம், ஒரு பொது நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்க வேண்டும்’ என கூறினார்.