தமிழர் வரலாற்றை திட்டமிட்டு அழித்த சிங்கள பேரினவாத அரசு !

31.05.2021 12:28:52

 

இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாக பொதுவாக யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு கருதப்படுகின்றது.

1981 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் திகதி இரவு சிங்கள வன்முறைக் குழுவொன்றால் இந்த எரிப்புச் சம்பவம் அரங்கேற்றக்கட்டது.

இவ்வன்முறைகளின் போது யாழ்ப்பாண நகரில் உள்ள முக்கிய சந்தை, வணிக நிறுவனங்கள், ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் மற்றும் யாழ்ப்பாணப் பொது நூலகம் ஆகியன முற்றாக எரிக்கப்பட்டன.