ஐ.பி.எல். 2021 – பெங்களுரை இலகுவாக வீழ்த்தியது பஞ்சாப்

01.05.2021 10:15:53

ஐ.பி.எல். தொடரின் 26 ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களுர் ரோயல் சலஞ்சர்ஸ் அணியை வெற்றி கொண்டது.

அகமதாபாத்தில் நேற்று இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களுர் அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ஓட்டங்கள் எடுத்தது.

அவ்வணி சார்பில் கெய்ல் 46 ஓட்டங்களையும், ராகுல் ஆட்டமிழக்காது 91 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பெங்களுர் சார்பில் ஜேமிசன் 2, சாம்ஸ், சாஹல், அகமது தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதையடுத்து, 180 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிங்கிய பெங்களுர் அணி, குறிப்பிட்ட இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 145 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

பெங்களுர் சார்பில் விராட் கோலி 35 ஓட்டங்களையும், ரஜத் பட்டிதார் 31 ஓட்டங்களையும், ஹர்ஷல் படேல் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதன் மூலம் பஞ்சாப் அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது பஞ்சாப் அணி பெற்ற 3வது வெற்றி. பெங்களுர் அணி பெற்ற இரண்டாவது தோல்வியாகும்.