சினோவாக் கொரோனா தடுப்பூசி 50.4 சதவிகிதம் பயனுள்ளது – பிரேசில் ஆராச்சி

13.01.2021 10:52:53

பிரேசில் நடத்திய சீனாவின் சினோவாக் பயோடெக் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி, 50.4 சதவிகிதம் பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு போதுமானதாக இல்லை மற்றும் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட விகிதத்திற்கு கீழ் இருப்பதாகவும் நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையினை கட்டுப்படுத்த அரசாங்கம் முனைப்பு காட்டிய தடுப்பூசிகளில் சீனாவின் சினோவாக் பயோடெக் தடுப்பூசியும் ஒன்றாகும்.

எனவே சமீபத்திய முடிவுகள் பிரேசிலுக்கு கணிசமான ஏமாற்றத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொரோனா தொற்று உறுதியான நோயாளிகளுக்கு 78 சதவிகித செயல்திறனைக் காட்டும் முடிவுகளைத் தருவதாக கடந்த வாரம் பிரேசிலிய ஆராய்ச்சியாளர்கள் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.