தனது தவறுகளை அரசாங்கம் மூடிமறைக்க உதவமாட்டோம்

19.02.2021 10:00:00

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் சர்வதேச சமூகம் இலங்கைக்கு எதிராக முன்வைக்கவுள்ள குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கான திட்டங்கள் எதுவுமில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்நளின்பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளிற்காக அரசாங்கத்தையே குற்றம்சாட்டவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கட்சியினர் எது சரியோ அதற்கு ஆதரவளிப்பார்கள் என தெரிவித்துள்ள அவர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட பின்னர்எழக்கூடிய பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு ஐக்கியப்பட்டு முயற்சிகளை மேற்கொள்ள இலங்கையர்கள் தயாராகயில்லை என குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கட்சியினரின் கருத்துக்களை செவிமடுப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை என குறிப்பிட்டுள்ள நளின்பண்டார நீதித்துறை மீது செல்வாக்கு செலுத்த முயன்றது மனித உரிமை மீறல்கள் போன்ற தனது தவறுகளை மூடிமறைப்பதற்கு அரசாங்கத்திற்கு எதிர்கட்சி உதவிபுரியாது எனவும் தெரிவித்துள்ளார்