ரிஷப் பண்ட் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார் !

31.03.2021 15:05:21

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய தலைவராக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் போட்டியின் போது ஷ்ரேயாஸ் அய்யர் உபாதைக்குள்ளானார்.

இதன்காரணமாக எதிர்வரும் 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல் தொடரில் ஷ்ரேயாஸ் அய்யர் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையிலேயே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய தலைவராக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக நேற்று(செவ்வாய்கிழமை) அணி நிர்வாகம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்மூலம் மிகக்குறைந்த வயதில் ஐ.பி.எல் தொடரில் அணியினை வழிநடத்துபவர் என்ற பெருமையினை ரிஷப் பண்ட் பெற்றுள்ளார்.