கொரோனா தடுப்பூசி போட தயக்கம் வேண்டாம் - ஆளுநர் தமிழிசை

21.02.2021 10:17:59

 

கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் தயங்க வேண்டாம் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

காரைக்காலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “காரைக்கால் மாவட்ட அரசு பொது மருத்துவமனையில், முதலில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகக் குறைவாக இருந்தது.

ஆகவேதான் மாவட்ட கலெக்டர், பொலிஸ், வைத்தியர்கள் ஆகியோர் தானாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இதன்விளைவாக பொதுமக்கள் பலர் தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். இதுவரை 25 சதவீதம் பேருக்கு கொரோனோ தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள யாரும் தயங்க வேண்டாம். இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்காக 24 நாடுகள் காத்திருக்கின்றன. 34 நாட்களில், சுமார் 1 கோடி பேர் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.

இன்னும் சில மாதங்களில் கொரோனா தடுப்பூசி இல்லாமல் போகலாம். எனவே பொதுமக்கள் தங்களுக்கான நேரம் வரும்போது, தயக்கம் இன்றி கொரோனா தடுப் பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.