சீனாவில் தங்க சுரங்கத்தில் வெடிவிபத்து: 22 தொழிலாளர்கள் நிலை என்ன?

12.01.2021 10:49:19

சீனாவின் கிழக்கே ஷான்டோங் மாகாணத்தில் யன்டாய் நகரில் குவிக்சியா என்ற பகுதியில் தங்க சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது.  இதில் சுரங்க தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.

 

இந்த நிலையில், சுரங்கத்தில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.  இந்த விபத்தில் சுரங்க பணியில் ஈடுபட்டிருந்த 22 தொழிலாளர்கள் சிக்கி கொண்டுள்ளனர்.  அவர்களுடன் எந்த தொடர்பும் கொள்ள முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

 

 

சீனாவில் பாதுகாப்பற்ற முறையில் இயங்க கூடிய சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.  இவற்றில் அவ்வப்போது இதுபோன்ற வெடிவிபத்துகள் ஏற்பட்டு தொழிலாளர்கள் சிக்கி கொள்வது அதிகரித்து காணப்படுகிறது.