மருத்துவ உதவி பொருட்களுடன் இந்தியா வரும் அமெரிக்க விமானங்கள் !

30.04.2021 09:35:01

அமெரிக்காவின் மருத்துவ உதவிப் பொருட்கள் இன்று (வெள்ளிக்கிழமை) இந்தியாவை வந்தடையவுள்ளன.

இதன்படி அமெரிக்க விமானப்படையின் சி-5 சூப்பர் கேலக்சி என்ற விமானமும் சி-17 குளோப் மாஸ்டர் என்ற விமானமும் மருத்துவ உபகரணங்களுடன் இந்தியாவை வந்தடையவுள்ளன.

ஒக்சிஜன் சிலிண்டர்கள், ரெகுலேட்டர்கள், பரிசோதனை கருவிகள், 95 மருத்துவ முககவசங்கள், நாடிதுடிப்பை பரிசோதிக்கும் ஆக்சி மீட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ சாதனங்கள் குறித்த விமானங்களில் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம்  கொவிஷீல்ட் தடுப்பூசியை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களையும் இந்தியாவுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.

அத்துடன் இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்க உதவும் நிபுணர்குழு ஒன்றையும் அனுப்ப உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.