85ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரஷ்யாவில் கொவிட்-19 பெருந்தொற்றினால் உயிரிழப்பு !

27.02.2021 10:09:23

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85ஆயிரத்தைக் கடந்தது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் இதுவரை மொத்தமாக 85ஆயிரத்து 304பேர் உயிரிழந்துள்ளனர்.

கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் ரஷ்யாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் தொற்றினால் 42இலட்சத்து 23ஆயிரத்து 186பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் 11ஆயிரத்து 086பேர் பாதிப்படைந்ததோடு, 428பேர் உயிரிழந்துள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மூன்று இலட்சத்து 54ஆயிரத்து 496பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2300பேரின் நிலை கவலைக்கிடம்.

இதுதவிர, ரஷ்யாவில் இதுவரை மொத்தமாக 37இலட்சத்து 83ஆயிரத்து 386பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.