ஸ்புட்னிக் வி தடுப்பூசி இலங்கைக்கு கிடைக்கும்

08.06.2021 10:47:32

இரண்டாவது டோஸ் செலுத்துவதற்கு தேவையான ரஷியாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இலங்கைக்கு கிடைக்கும் என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் உறுதியளித்துள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

அதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை அல்லது இந்த வார இறுதிக்குள் குறித்த தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கும் என அவர் மேலும் கூறினார்.

மேலும் குறித்த தடுப்பூசி கண்டி மாவட்டத்திற்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதக்கவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.