4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம்

10.01.2021 09:57:02

 

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 47ஆவது நினைவு அஞ்சலி நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

யாழ். முற்றவெளில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை நினைவாலயத்தில் இன்று காலை 9.30 மணிக்கு இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.