நடிகை ஆனந்தி திடீர் திருமணம்

10.01.2021 10:45:03

சினிமா உதவி இயக்குனரை திடீர் திருமணம் செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து நடிகை ஆனந்தி விளக்கம் அளித்துள்ளார்.

உதவி இயக்குனர் சாக்ரடீசை திடீர் திருமணம் செய்து கொண்டது ஏன்? என்பது பற்றி ஆனந்தி பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- ‘‘நானும், சாக்ரடீசும் 4 வருடங்களாக காதலித்து வந்தோம். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு எடுத்திருந்தோம். அந்த நாளுக்காக இருவரும் காத்திருந்தோம். அந்த நாள் சமீபத்தில் அமைந்தது.

பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். திருமணம் செய்து கொண்டதால் சினிமாவில் இருந்து விலக மாட்டேன். தொடர்ந்து நடிப்பேன். என் கைவசம் 4 படங்கள் உள்ளன. அந்த நான்கு படங்களிலும் முதலில் நடித்துக்கொடுப்பேன். அதன் பிறகு புதிய படங்களை ஒப்புக்கொள்வேன்.’’ இவ்வாறு ஆனந்தி கூறினார்.