தடுப்பூசி திட்டம்- மதுரையில்

10.01.2021 10:24:33

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை மதுரை மாவட்டத்தில் ஜன.16-ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

இந்தியாவில் சோதனை செய்யப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. இதனால் நாடு முழுதும், தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெற்றது.

இதையடுத்து கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுடன் நாளை பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த நிலையில் நாடு முழுவதும் வருகிற 16-ந்தேதி (சனிக்கிழமை) முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. முதல் கட்டமாக முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கு செலுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

அதன்படி தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை மதுரை மாவட்டத்தில் ஜன.16-ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் 2 கட்டமாக தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது