கடந்த ஒரு வருடத்தில் ரயில் விபத்துக்களால் 8 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பு !

03.06.2021 09:54:42

 

கடந்த ஒரு வருடத்தில் ரயில் விபத்துக்களால் 8 ஆயிரத்து 700 பேர் உயிரிழந்துள்ளதாக ரயில்வேதுறை தெரிவித்துள்ளது.

மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள ரயில்வே அதிகாரிகள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதும், புலம் பெயர் தொழிலாளர்கள் சாலை வழியைக் கைவிட்டு, ரயில் தண்டவாளங்கள் வழியாக தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமுடக்கம் என்பதால் ரயில்கள் இயங்காது என நினைத்து பலர் பயணித்திருக்கலாம் என்றும், மாறாக ரயில்கள் இயங்கியமையால் 8 ஆயிரத்து 733 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.