பார்தலோமெவ் மருத்துவமனைக்கு இளவரசர் ஃபிலிப் செயின்ட் மாற்றம்

02.03.2021 09:37:33

பிரித்தானிய இளவரசி எலிசபெத்தின் கணவரும் எடின்பர்க் கோமகனுமான இளவரசர் ஃபிலிப், லண்டனில் உள்ள செயின்ட் பார்தலோமெவ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி மத்திய லண்டனில் உள்ள தனியார் கிங் எட்வர்ட் ஏஐஐ இன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளவரசர் ஃபிலிப், 13 இரவுகளுக்குப் பிறகு நேற்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் வெளியேறினார்.

இதுதொடர்பாக பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இளவரசர் ஃபிலிப், கிங் எட்வர்ட் ஏஐஐ இன் மருத்துவமனையிலிருந்து செயின்ட் பார்தலோமெவ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தொற்றுநோய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பார்கள். அத்துடன் முன்பே இருக்கும் இதய நிலைக்கு பரிசோதனை மற்றும் கண்காணிப்பை மேற்கொள்வார்கள்.

இளவரசர் ஃபிலிப், வசதியாக இருக்கிறார் மற்றும் சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறார். ஆனால் வாரத்தின் இறுதி வரை மருத்துவமனையில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.