இலங்கை நிதான துடுப்பாட்டம் இரண்டாவது டெஸ்ட் போட்டி !

31.03.2021 15:06:40

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று(புதன்கிழமை) இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்தியதீவுகள் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 354 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் Kraigg Brathwaite 126 ஓட்டங்களையும், Rahkeem Cornwall 73 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் சுரங்க லக்மால் 4 விக்கட்டுக்களையும், துஷ்மந்த சமீர 3 விக்கட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாட களமிறங்கியுள்ள இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கட்டுகளை இழந்து 136 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் லஹிரு திரிமான்ன 55 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.

இந்தநிலையில் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இலங்கை நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.