4 படிநிலைகளில் முழுமையாக பிரித்தானியாவின் முழு முடக்கம், விடுவிக்கப்படும்…

23.02.2021 07:24:19

பிரித்தானியாவை முழுமையான முடக்கத்தில் இருந்து விடுவிப்பதற்கான நான்கு-படி நிலைகளை பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வகுத்துள்ளார். மேலும் பரவலடையக் கூடிய மாறுதலடைந்த புதிய கொரோனோ வைரசானது இங்கிலாந்தின் தென்கிழக்கு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அதாவது ஜனவரி 4 முதல் பிரித்தானியா முழு முடக்க நிலைக்கு இட்டுச்செல்லப்பட்டது. தற்போது அனைத்திலும் பாரிய முன்னேற்றங்கள் காணப்படுவதால், ஜூன் மாத இறுதிக்குள் பொருளாதாரத்தின் பெருமளவிலான மையங்களை திறக்க முடியும் என பொரிஸ் ஜோன்சனின் அரசாங்கம் நம்புகிறது.

இதன் அடிப்படையில் நான்கு படிநிலைகளும் திகதிகள் மூலம் அன்றி தரவுகள் மூலம் முடிவு செய்யப்படும் எனவும், இந்தத் திட்டம் மாற்றத்திற்கு உட்பட்டது என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார். எதிர்காலத்தில் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதற்காகன எச்சரிக்கையாகவும், பொருளாதாரமானது மேலும் வலுவிழக்காமல் இருப்பதற்குமான திட்டமாக இந்த எச்சரிக்கை நடவடிக்கை தொடர வேண்டும் என்பதை விளக்க டவுனிங் ஸ்ட்ரீட் அலுவலக அதிகாரிகள் ஆர்வமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

“நாங்கள் காலவரையின்றி கட்டுப்பாடுகளுடன் செல்ல முடியாது, இந்தப் படிநிலைகள் எச்சரிக்கையானதாகவும், ஆனால் இடைநிறுத்த முடியாததாகவும் இருக்க வேண்டும் என ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார். ” இறுதியாக பிரித்தானியா முழுவதும் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதுடன் மார்ச் 8 ஆம் திகதி “முதல் படிநிலை” ஆரம்பமாகும் என நாடாளுமன்றில் பிரதமர் தெரிவித்துள்ளார். அதே போல் ஒரு நபருடன் பூங்கா பெஞ்சில் அமர்ந்து கொள்வது போன்ற வரையறுக்கப்பட்ட வெளிப்புற சமூக தொடர்புகள் மீண்டும் திரும்புவதுடன் மார்ச் 29ல் படிநிலையின் இரண்டாம் கட்டமும் ஆரம்பமாகும். அத்துடன் ஆறு பேர் கொண்ட குழுக்கள் வெளியில் சந்திக்கவும், இரண்டு வீடுகள் கலந்துகொள்ளல் அனுமதிக்கப்படுவதுடன் மேலும் கட்டுப்பாடுகள் நீக்கப்படும்.

பின்வரும் நடவடிக்கைகள் குறைந்தபட்சம் ஐந்து வார இடைவெளியுடன் நடைபெறும் என கூறிய பிரதமர், அரசாங்கத்திற்கு தேவையான தரவுகளை சேகரிக்க நான்கு வாரங்களும், சம்பந்தப்பட்ட பொதுமக்கள் மற்றும் துறைகளை எச்சரிக்க அரசாங்கத்திற்கு ஒரு வாரமும் தேவை என சுட்டிக்காட்டியுள்ளார். ஏப்ரல் 12 இற்கு முன்பாக ஆரம்பிக்கப்படப் போகாத இரண்டாம் கட்ட படிநிலையானது, அத்தியாவசியமற்ற சில்லறை வணிகங்களான சிகையலங்கரிப்பு நிலையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், அருங்காட்சியகங்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் ஏனைய பூங்காக்கள் என்பன மீண்டும் வழமைக்குத் திரும்பும். சமூக தொடர்பு விதிகள் உள்ளக நடவடிக்கைகளிற்குத் தொடரும், அதாவது ஒரே வீட்டினர் மட்டுமே கலந்துகொள்ள முடியும். முக்கியமாக, விருந்தோம்பல் துறை இந்த கட்டத்தில் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும், இருப்பினும், விடுதிகள் மற்றும் உணவகங்கள் ஆறு பேர் கொண்ட குழுக்கள், அல்லது இரண்டு வீடுகளின் குழுக்களுக்கு மட்டுமே சேவை செய்ய அனுமதிக்கப்படும். கடந்த கோடையில் கடும் விமர்சனங்களுக்குப் பிறகு வாடிக்கையாளர்கள் எதை ஓர்டர் செய்ய முடியும் என்பதில் முடக்க உத்தரவு அல்லது கட்டுப்பாடுகள் இருக்காது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். மே 17 இற்கு முன்பாக ஆரம்பிக்கப்படப் போகாத மூன்றாம் கட்ட படிநிலையானது, பெரும்பாலான சமூக இடைவெளி விதிகளை நீக்கும். 30 பேர் கொண்ட குழுக்கள் பொது இடத்தில் அல்லது தனியார் தோட்டத்தில் வெளியில் சந்திக்க முடியும். ஆறு பேர் கொண்ட குழுவின் விதிமுறைகள் பொருந்தும் என்றாலும், பப்கள் மற்றும் உணவகங்களுக்குள் சேவை செய்ய அனுமதிக்கப்படும். உட்புற பொழுதுபோக்குகளும் மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படும், அரங்குகள் 1,000 பேர் வரை நடத்த அனுமதிக்கப்படும். வெம்ப்லி ஸ்டேடியம் போன்ற மிகப்பெரிய அரங்குகளில் கலந்துகொள்ள 10,000 பார்வையாளர்கள் வரை அனுமதிக்கப்படுவர்.

இறுதியாக, நான்காம் படி, இது ஜூன் 12 முன் விரைவாக நடக்காது, பெரும்பாலான சமூக தொடர்பு விதிகளை நீக்குவது மற்றும் இரவு விடுதிகளுக்கு அனுமதிக்கப்படும். விஷயங்கள் சரியாக நடந்தால் திருமணங்கள் போன்ற தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகளுக்கு வரம்புகள் இருக்காது. நான்காவது படி வரை செல்லும் வாரங்கள் மற்றும் மாதங்களில், இசை விழாக்கள் இசை விழாக்கள் போன்ற பெரிய வெளிப்புற நிகழ்வுகள் குறித்து அரசாங்கம் மதிப்புரைகளை மேற்கொள்ளும். கொரோனா பரிசோதனையில் “எதிர்” முடிவுகளைப் பெற்றோர் அல்லது தடுப்பூசியைப் பெற்றோர் ஆகியோருக்கான கோவிட் சான்றிதழ் போன்ற சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் கவனிக்கும். சர்வதேச பயணம் குறைந்தது மே 17 வரை திரும்பாது, மேலும் இங்கிலாந்தின் நான்கு தேசங்களிற்கு இடையிலான பயணம் பகிர்ந்தளிக்கப்பட்ட அரசாங்கங்களுக்கு இடையே விவாதிக்கப்படும். முடக்கத்திலிருந்து நாடு வெளியேறும் வேகமானது நான்கு முக்கிய சோதனைகளின் முடிவுகளைப் பொறுத்து அமையும். தடுப்பூசி போடுதல் எவ்வாறு நடக்கிறது; தடுப்பூசிகள் மருத்துவமனை மற்றும் இறப்புகளை எவ்வாறு பாதிக்கின்றன; நோய்த்தொற்று விகிதங்கள் குறைவாகவே உள்ளனவா மற்றும் மாறுதலடைந்த புதிய வகைகள் கொரோனா வைரஸ் உருவாகியுள்ளதா போன்றனவே அந்த முக்கிய சோதனகளாகும் (இந்த நான்காவது மற்றைய மூன்று சோதனைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)….. என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.