சசிகலா வந்தவுடன் ஒட்டுமொத்த அதிமுகவும் அவரை தலைவியாக ஏற்றுக் கொள்வார்கள் - கார்த்தி சிதம்பரம்

18.01.2021 10:36:10

இது குறித்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:-

 

சசிகலா வந்தவுடன் ஒட்டுமொத்த அதிமுகவும் அவரை தலைவியாக ஏற்றுக் கொள்வார்கள். கமல்ஹாசனால் எம்ஜிஆர் ஆக முடியாது. தேர்தல் வரும்போது எம்ஜிஆர் பெயரை பயன்படுத்துவது இயல்பே.

 

 

தனியாக இருந்தால் எதையும் சாதிக்க முடியாது என்பதால் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு கமல் வர வேண்டும். ஒரே பாடலில் சினிமாவில் ஜெயிப்பது போல் அரசியலில் வெல்வது என்பது சாத்தியமற்றது.

 

இவ்வாறு கார்த்தி சிதம்பரம் கூறினார்.