கொரோனாவை தொடர்ந்து புதிய பூஞ்சை நோய் மூளையை தாக்கி உயிரை பறிக்கும் அபாயம்

16.01.2021 08:12:59

கொரோனா உறுதியானவர்களில் பலருக்கும் இந்த மாதிரி அறிகுறிகளுடன் புதுவிதமான இந்த பூஞ்சை நோய் பரவுகிறது. இந்த பூஞ்சை நோய் தாக்கி இருந்தால் பார்வை கோளாறு ஏற்படுகிறது.

கொரோனா வைரஸ் தாக்கினால் காய்ச்சல், தலைவலி என்பதை தாண்டி நாவில் ருசி தெரியாது. வாசனைகளை நுகரும் தன்மை இழந்துபோகும் என்பதுதான் இதுவரை அறிந்தது.

ஆனால் இப்போது புதுப்புது அறிகுறிகளுடன் நோயாளிகள் வருவது மருத்துவர்களையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சர்க்கரை வியாதி உடையவர்கள், உடலில் நோய் எதிர்ப்பு சக்திகுறைவாக இருப்பவர்களிடமும் புது விதமான அறிகுறிகள் சிலவற்றை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

அதாவது சைனசில் ஒரு விதமான பூஞ்சை நோய் பரவுகிறது. இது காட்டு தீபோல் உடலில் வேகமாக பரவும் தன்மை கொண்டது. மிகவேகமாக தலையில் பரவி மூளையை தாக்குகிறது. இதன் மூலம் உயிரிழப்பு கூட ஏற்படுகிறது.

இந்த மாதிரியான அறிகுறிகளை கடந்த மார்ச் மாதம் கொரோனா தொடக்க காலத்தில் இருந்தே பார்த்து வருவதாக கண், மூக்கு, தொண்டை நிபுணர்கள் கூறுகிறார்கள்

ஆரம்பத்தில் ஒன்றிரண்டு பேர்களிடம் மட்டுமே கண்டறியப்பட்ட இந்த நோய் இப்போது அதிகமாக பரவி வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்ரையின் அளவு கட்டுக்குள் இருந்தாலும் சரி, இல்லா விட்டாலும் சரி அதேபோல் முதியவர்களிடமும் இந்த மாதிரி அறிகுறிகள் தென்படுகிறது.

கொரோனா உறுதியானவர்களில் பலருக்கும் இந்த மாதிரி அறிகுறிகளுடன் புதுவிதமான இந்த பூஞ்சை நோய் பரவுகிறது.

இந்த பூஞ்சை நோய் தாக்கி இருந்தால் பார்வை கோளாறு ஏற்படுகிறது. அதாவது எந்த பொருளை பார்த்தாலும் இரண்டாக தெரியும். கண் பார்வை குறைவாக இருக்கும், முகம் வீங்கும், எதையும் சிந்திக்க முடியாமால், எதிலும் கவனம் செலுத்தமுடியாமல் அசமந்தமாக இருக்க செய்யும், அதேபோல் மூக்கில் இருந்து ரத்தம் வடியலாம், மூக்கில் தொடர்ந்து அரிப்பு ஏற்படலாம்.

இந்த மாதிரி அறிகுறிகளுடன் பரவும் இந்த பூஞ்சை மிகவேகமாக உடலில் பரவி மூளையை தாக்கி செயலிழக்கவும் வைத்து விடுகிறது.

எனவே சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.