மீண்டும் புத்துயிர் பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தூபி !

23.04.2021 09:36:39

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது.

அதற்கு பாரிய எதிர்பலைகளை எழுந்ததை அடுத்து மீண்டும் அதே இடத்தில் தூபியை அமைக்க பல்கலைகழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.