நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்!

31.01.2023 22:32:34

நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.

 

ஏப்ரல் மாதம் 6ம் திகதி வரை 2 அமர்வுகளாக வரவு செலவுத்திட்ட கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இது என்பதால், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடைபெறும் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் முதல்முறையாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்தவுள்ளார்.

இதையடுத்து பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.

பின்னர் நாடாளுமன்றத்தில் நாளை மத்திய வரவு செலவுத்திட்ட அவர் தாக்கல் செய்கிறார்.

பின்னர் குடியரசு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது விவாதம் நடைபெறவுள்ளது.

ராஜஸ்தான், சட்டிஸ்கர் உள்ளிட்ட 9 மாநில சட்டபேரவைகளுக்கு இந்த ஆண்டில் தேர்தல் நடைபெறவுள்ளது.