கடும் பனிப்பொழிவு 60 பேர் உயிரிழப்பு - அமெரிக்கா

20.02.2021 11:33:51

அமெரிக்காவின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள பனிப்பொழிவு காரணமாக சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் Texas’ Houston, Austin  Dallas, ஆகிய பகுதிகளே பனிபொழிவு காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சுமார் 13 மில்லியன் மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகள், கார்கள், வீதிகள், மரங்கள் என அனைத்தும் உறை பனிக்குள் மூழ்கி கிடக்கின்றன.

நீர்வீழ்ச்சிகளும் பனி சிற்பங்களாக உறைந்து காணப்படுகின்றன. குளிர் அதிகரிப்பதால் மின்சார தேவை அதிகரித்துள்ளது.

ஆனால், பனிப்பொழிவால் மின் கட்டமைப்பு  முடங்கி உள்ளதால், கடந்த நான்கு நாட்களாக சுமார் 34 இலட்சம் மக்கள் மின்சாரமின்றி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மின்தடை காரணமாக பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.

இதேவேளை, டெஸ்சாஸ் மாநிலத்திற்கு அவசர உதவிகளை உடனடியாக வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்  உறுதியளித்துள்ளார்.