ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை: 'பா.ஜ.க. அல்லாத தலைவர்கள் மீது வழக்கு போட்டு அழிக்க சதி நடக்கிறது'எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து

24.03.2023 00:54:20

பா.ஜ.க. அல்லாத தலைவர்கள் மீது வழக்கு போட்டு அழிக்க சதி நடக்கிறது என எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவர்கள், பா.ஜ.க. அல்லாத தலைவர்கள் மீது வழக்கு போட்டு அழிக்க சதி நடக்கிறது என எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். மத்திய சட்ட மந்திரி கருத்து அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத்தின் சூரத் கோர்ட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இது குறித்து பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சித்தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அது வருமாறு:- மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ (பா.ஜ.க. மூத்த தலைவர்) ராகுல்காந்தி என்ன கூறினாலும், அது தீங்கு ஏற்படுத்துகிறது. இது அவரது கட்சிக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் கேடு ஏற்படுத்துகிறது. இது நாட்டுக்கு நல்லதல்ல. ராகுல் காந்தியின் செயல்பாடுகள் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் என்னிடம் தெரிவித்தனர். இது அவர்களது கட்சிக்கு தீங்கு ஏற்படுத்துகிறது. அவர்களது கட்சி மூழ்கி வருகிறது.


ரவி சங்கர் பிரசாத் (பா.ஜ.க. மூத்த தலைவர்):- ராகுல் காந்தி இப்படி அவதூறாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மேலும் சிக்கல்களை அவர் எதிர்கொள்ள நேரிடும். ராகுல் காந்தி மற்றவர்களை அவதூறாகப் பேசினால் சட்டம் தன் கடமையைச் செய்யும். கெஜ்ரிவால்- ஹேமந்த் சோரன் அரவிந்த் கெஜ்ரிவால் (டெல்லி முதல்-மந்திரி, ஆம் ஆத்மி கட்சித்தலைவர்):- பா.ஜ.க. அல்லாத தலைவர்கள் மற்றும் கட்சிகள் மீது வழக்குகள் போட்டு அழிக்க சதி நடக்கிறது. காங்கிரசுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும், இது போன்ற அவதூறு வழக்கில் அவரை சிக்க வைப்பது சரியல்ல.

கேள்விகள் கேட்பது எதிர்க்கட்சிகளின் வேலைதான். நாங்கள் கோர்ட்டை மதிக்கிறோம். ஆனால் இந்தத் தீர்ப்பை ஏற்கவில்லை. ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட் முதல்-மந்திரி, ஜே.எம்.எம். கட்சித்தலைவர்):- நான் நீதித்துறையில் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். ஆனாலும், அவதூறு வழக்கில் ராகுல் காந்தி தண்டிக்கப்பட்டிருப்பதை நான் ஏற்க முடியாது. பா.ஜ.க. அல்லாத பிற கட்சி அரசுகளும், தலைவர்களும் சதிக்கு இரையாகி வருகின்றனர்.

இது நாட்டின் ஜனநாயகத்துக்கும், அரசியலுக்கும் கவலை அளிக்கும் விஷயம் ஆகும். அசோக் கெலாட்- பூபேஷ் பாகல் அசோக் கெலாட் ( ராஜஸ்தான் முதல்-மந்திரி, காங்கிரஸ் மூத்த தலைவர்):- ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. நீதித்துறை மீது அழுத்தம் உள்ளது. தேர்தல் கமிஷன், அமலாக்கத்துறை என எல்லாமே தவறாக பயன்படுத்தப்படுகின்றன. தாக்கத்தின்கீழ் எல்லா முடிவுகளும் எடுக்கப்படுகின்றன.

ராகுல் துணிச்சலான மனிதர். பா.ஜ.க. அரசுடன் அவர் மட்டுமே போட்டி போட முடியும். பூபேஷ் பாகல் (சத்தீஷ்கார் முதல்-மந்திரி, காங்கிரஸ் மூத்த தலைவர்):- ஊடகங்களை நசுக்கும் முயற்சி நடக்கிறது, நீதித்துறையில் தாக்கத்தை செலுத்தும் முயற்சி உள்ளது. மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மீது இந்த அளவில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.