இந்தியாவில் முதன் முறையாக தோல்பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது

04.06.2021 10:45:23

 

இந்தியாவில் முதன் முறையாக தோல்பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் உள்ள ஒருவருக்கு குறித்த நோய் தாக்கம் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

சித்ரதுர்கா மாவட்டம் சிக்கலாபுரா கிராமத்தைச் சேர்ந்த 50 வயதான நபர் ஒருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட் நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.

இதனையடுத்து  முற்றிலுமாக குணமடைந்த அவருக்கு காது பகுதியில் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு மேற்கொண்ட பரிசோதனைகளில் தோல் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைபவர்களுக்கு கறுப்பு பூஞ்சை மற்றும் வெள்ளை பூஞ்சை தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தற்போது கறுப்பு பூஞ்சையின் தாக்கம் அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில், புதிதாக தோல் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.