விஜய் நடிக்க இருக்கும் தளபதி 65 பட பூஜையில் பூஜா கலந்து கொள்ளாதது ஏன் ?

31.03.2021 15:02:08

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் தளபதி 65 பட பூஜையில் பூஜா ஹெக்டே கலந்து கொள்ளாதது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

இதில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். ஆனால் படத்தின் நாயகி பூஜா ஹெக்டே கலந்துக் கொள்ளவில்லை. 

இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், தளபதி 65 பட பூஜையில் இன்று என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. நான் வேறொரு படப்பிடிப்பில் இருந்தேன். அதனால் தளபதி 65 பட பூஜையில் கலந்து கொள்ள முடியாததற்கு வருந்துகிறேன். இருப்பினும் படக்குழுவினருடன் இணைந்து பணியாற்ற மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் என்று அவர் பதிவு செய்துள்ளார்.