பெலரஸ் விமானங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் வான்வெளியில் செல்ல தடை!

06.06.2021 10:14:33

 

ரியானேர் விமானத்தை கட்டாயமாக தரையிறக்கிய சம்பவத்தை அடுத்து ஐரோப்பிய ஒன்றியம் பெலரஷ்ய விமானங்களை அதன் வான் பரப்பில் செல்ல தடை விதித்துள்ளது.

முன்னாள் சோவியத் நாட்டின் வான் பரப்பில் செல்வத்தைத் தவிர்க்க ஐரோப்பிய விமான நிறுவனங்களும் கடுமையாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் மின்ஸ்கில் ஒரு பயணிகள் விமானத்தை கட்டாயப்படுத்தி தரையிறக்க பின்னர் எதிர்க்கட்சி ஊடகவியலாளரை கைது செய்த பெலரஸ் மீது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கோபத்தில் உள்ளன.

இருப்பினும் சில விமான நிறுவனங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை விமான பயணத்தை “அரசியல்மயமாக்குகின்றன” என விமர்சித்துள்ளன.