நாட்டை கட்டியெழுப்புவது எப்படி ?

24.03.2023 00:10:19

ஊழல், மோசடிகள், உறவுமுறைகள் அற்ற தூய்மையான மக்களின் அரசாங்கத்தை அமைப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான திரு மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தாம் நாட்டின் நலனுக்காகவே சர்வகட்சி அரசாங்கத்தை முன்னிறுத்துவதாகவும், அதிபர் மற்றும் பிரதமர் பதவிகளை எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

பதவிகளை எதிர்பார்க்கவில்லை

நாடு தற்போது எரிமலையின் மேல் கனன்று கொண்டிருப்பதாகவும் அதனை அணைத்து வளமான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் தலையிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 நிபந்தனைகளில் மிக முக்கியமான விடயம்

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பணம் பெற்றமைக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குவதாக தெரிவித்த சிறிசேன, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் மிக முக்கியமான விடயம் ஊழல் மற்றும் மோசடி தொடர்பாக நாடுகள், கடுமையான முடிவுகள் மற்றும் திட்டங்கள் எடுக்கப்பட வேண்டும்.இது ஐக்கிய நாடுகளின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டது எனவும் தெரிவித்தார்.