பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘சூர்யா 40’ படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

17.02.2021 10:13:31

நடிகர் சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் நகைச்சுவை நடிகர் சூரியும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த வெற்றிக் கூட்டணியில் தானும் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சூர்யாவுடன் அஞ்சான், சிங்கம் 3 போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய நடிகர் சூரி, தற்போது மூன்றாவது முறையாக அவருடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.