ஜனவரி 27ஆம் தேதிக்கு பிறகும் என்னுடைய ஆட்சி நிச்சயம் இருக்கும் - முதலமைச்சர் பழனிசாமி

20.01.2021 10:27:41

சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போதே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முக்கிய கட்சி தலைவர்கள் தற்போதே தங்களின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். இதில் முக்கியமாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது சொந்த தொகுதியில் குலதெய்வ வழிபாடு செய்தபின்னர் பிரசாரத்தை தொடங்கி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பிரசாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில் ,

 

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தான் சசிகலாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்று கூறி வருகிறார். நான் மக்களால் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவன். என்னை முதல்வராக அதிமுக எம்எல்ஏக்கள் தான் தேர்வு செய்தார்கள். மக்களுக்கு நிறைவான ஆட்சியை நாங்கள் தருகிறோம்.

 

எனது ஆட்சி சில நாட்களில் முடிவுக்கு வரப்போவதாக ஸ்டாலின் கூறி வருகிறார். ஜனவரி 27ஆம் தேதிக்குப் பிறகும் எனது தலைமையிலான ஆட்சி நீடிக்கும். சசிகலா விடுதலையாகி வந்தாலும் தான்தான் முதல்வராக நீடிப்பேன் என்றும் கூறி ஸ்டாலின் பேச்சுக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில் அளித்துள்ளார்.