நடராஜன் சிறப்பாக செயல்பட வாய்ப்பு குறைவு

03.01.2021 11:28:50

 

டெஸ்ட் போட்டிகளில் நடராஜன் சிறப்பாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

 

காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து உமேஷ் யாதவ் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக 18 பேர் கொண்ட அணியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டார். முதல் முறையாக டெஸ்ட் அணியில் இணைந்துள்ள நடராஜனுக்கு  முன்னணி வீரர்கள் பலர் வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் தெரிவித்து வருகின்றனர்

.இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரும், ஐ.பி.எல். சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னர்,  டெஸ்ட் போட்டியில் நடராஜன் சிறப்பாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் அவர் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.