இலங்கைக்கு எதிரான அனைத்தையும் ஐ.நா தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே செய்து முடித்த மிச்சேல் பச்லட் !

31.03.2021 09:27:50

 

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரிக்க ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட் நியமித்த 12 பேர் கொண்ட குழுவுக்கு 2.8 மில்லியன் அமெரிக்க டொலர் நிதிக்கு வரவுசெலவுத்திட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஐ.நா பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிரைவேற்றப்படுவதற்கு முன்பாகவே இந்த நிதி மிச்சேல் பச்லட்டால் முன்வைக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிங்கள பத்திரிகை ஒன்றின் வெளிநாட்டு செய்தித் தொடர்பாளர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, அதாவது கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதியே 12 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டதாகவும், அதற்கு 2.8 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை செயல்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு 2.8 பில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுவதாகவும், ஐ.நா பொதுச் சபையின் 76 வது அமர்வில் கூடுதல் நிதியை கோர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.