இன்று கொல்கத்தாவுடன் மோதல் - முதல் வெற்றியை ருசிக்குமா மும்பை அணி !

13.04.2021 11:27:54

ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன.

சென்னை மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள இப்போட்டியில், கொல்கத்தா அணிக்கு ஓய்ன் மோர்கனும் மும்பை அணிக்கு ரோஹித் சர்மாவும் தலைமை தாங்கவுள்ளனர்.

நடப்பு தொடரின் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான முதல் லீக் போட்டியில், கொல்கத்தா அணி 10 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

அதேபோல மும்பை இந்தியன்ஸ் அணி, றோயல் செலஞ்சர்ஸ் அணிக்கெதிரான தனது முதலாவது லீக் போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஆகவே இப்போட்டியில் மும்பை அணி முதல் வெற்றிக்காகவும் பெங்களூர் அணி இரண்டாவது வெற்றிக்காகவும் களமிறங்கவுள்ளன.

இரு அணிகளும் இதுவரை 27 முறை மோதியுள்ளன. மும்பை அணி 21 முறை வெற்றிபெற்றுள்ளது. கொல்கத்தா அணி 6 முறை வெற்றிபெற்றுள்ளது.