கொரோனா சிகிச்சை பணிகளுக்காக அமெரிக்க இந்திய கோடீசுவரர் ரூ.75 கோடி நிதி உதவி

04.05.2021 10:45:58

அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி கோடீசுவரர் இந்தியாவில் கொரோனா சிகிச்சை பணிகளுக்காக ரூ.75 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி கோடீசுவரர் இந்தியாவில் கொரோனா சிகிச்சை பணிகளுக்காக ரூ.75 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார். அவர் சன் மைக்ரோசிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார்.


20 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகள், 15 ஆயிரம் ஆக்சிஜன் சிலிண்டர்கள், 500 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், 100 வென்டிலேட்டர்கள் ஆகியவற்றை வழங்குமாறு இந்தியாவில் உள்ள தன்னார்வ அமைப்புகளிடம் இருந்தும், ஆஸ்பத்திரிகளிடம் இருந்தும் தினந்தோறும் வேண்டுகோள் வந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். இதில் தாமதம் செய்வது மேலும் உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும். ஆகவே, அவசர நிதி உதவியாக ரூ.75 கோடி வழங்குகிறோம். இதுபோல் மற்றவர்களும் உதவ முன்வர வேண்டும்.