கத்ரீனா கைப் விஜய் சேதுபதிக்கு ஜோடி

11.01.2021 12:15:07

தமிழில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க உள்ள பாலிவுட் படத்தில் அவருக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி, அடுத்ததாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அதன்படி சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் மும்பைகார் படத்தில் அவர் நடிக்க உள்ளார். இது தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்காகும். இதில் விஜய் சேதுபதி காமெடி வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் மேலும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்தாதூன் படத்தை இயக்கி பிரபலமான ஸ்ரீராம் ராகவன் இப்படத்தை இயக்க உள்ளாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.