கிரீன்லாந்து நாடாளுமன்றத் தேர்தலை உன்னிப்பாக கவனித்துவரும் சர்வதேச நாடுகள் !

07.04.2021 09:40:34

கிரீன்லாந்தில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை சர்வதேச நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் தேர்தல், சர்வதேச நிறுவனங்கள் சுரண்ட விரும்பும் அரிய பூமி உலோகங்களின் தலைவிதியை தீர்மானிக்க உதவும்.

56,000 மக்களைக் கொண்ட ஆர்க்டிக் தீவான கிரீன்லாந்தை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2019ஆம் ஆண்டில் வாங்க முன்வந்தார்.

ஆனால், இது விற்பனைக்கு இல்லை என்று கூறப்பட்டது. இது டென்மார்க் இராச்சியத்தின் ஒரு பகுதியாகும். ஆனால் பரந்த சுயாட்சியைக் கொண்டுள்ளது.

காற்றாலை விசையாழிகள், மின்சார வாகனங்கள் மற்றும் போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் நியோடைமியம் உள்ளிட்ட அரிய பூமி உலோகங்கள் கிரீன்லாந்தில் உள்ளது. அத்துடன் கடல் வழியாக அணுகல் எளிதானது.