கே.ஜி.எப் இரண்டாம் பாகத்தின் கேரள வெளியீட்டு உரிமையை நடிகரான பிரித்விராஜ் கைப்பற்றி உள்ளார்.

08.01.2021 08:47:01

 

கே.ஜி.எப் இரண்டாம் பாகத்தின் கேரள வெளியீட்டு உரிமையை பிரபல மலையாள நடிகரான பிரித்விராஜ் கைப்பற்றி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கேஜிஎப் படங்களின் தீவிர ரசிகன் நான். ராக்கியின் வரவுக்காக நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

2018-ஆம் ஆண்டு வெளியான படம் கேஜிஎப். இதில் நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படம் இந்தியளவில் பெரிய ஹிட் அடித்து நடிகர் யாஷுக்கு பரவலான ரசிகர்களை உருவாக்கித் தந்தது.

இப்படத்தை இயக்கியவர் பிரசாந்த் நீல். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார்.