முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபியொன்றை கனடாவின் பிரம்டனில் அமைக்கப்டும்

21.01.2021 09:02:52

முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபியொன்றை கனடாவின் பிரம்டனில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு;ள்ளது.
பிரம்டன் மேயர் பற்றிக் பிரவுண் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டவேளை 75000 தமிழர்கள் கொல்லப்பட்டனர் என பற்றிக் பிரவுண் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமை இலங்கைஅரசாங்கத்தின் கலாச்சார இனப்படுகொலையின் ஒரு தொடர்ச்சி என தெரிவித்துள்ள அவர் எவரும் உயிரிழக்கவில்லை என காண்பிப்பதற்கும் வரலாற்றை மாற்றி எழுதுவதற்கும் இலங்கை அரசாங்கம் முயல்கி;ன்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் சொந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அமைப்பதற்கு பிரம்டன் மாநகர சபை தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் இலங்கை இலங்கைஅரசாங்கம் தனது இரத்தக்கரை படிந்த வரலாற்றை வெள்ளையடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை நாங்கள் கனடாவி;ல் அதற்கு எதிர்மாறானதை செய்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் தமிழர் இனப்படுகொலையை மறக்கப்போவதில்லை பாதிக்கப்பட்டவர்களை நாங்கள் நினைவில் வைத்திருப்போம் எனவும் அவர் குறிப்பிட்டள்ளார்