வைத்திய சேவை பெறுவோருக்கு விசேட அறிவிப்பு !

05.06.2021 09:45:15

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலுள்ள சிகிச்சை களத்தில் வைத்திய சேவை பெறும் நோயாளிகளுக்கான மருந்து பொருட்கள், தபால்  ஊடாக  அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்

ஆகவே இன்றிலிருந்து யாழ்.போதனா வைத்தியசாலையின் கிளினிக் பிரிவில் வைத்திய சேவை பெறும் நோயாளர்கள், தமக்குரிய மருந்துப் பொருட்களை 021- 2214249, 021- 2222261, 021- 2223348 ஆகிய  தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி, தபால் ஊடாக  வீடுகளில் இருந்தவாறு தமக்குரிய மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த செயற்பாட்டுக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் மக்களை அதிலிருந்து பாதுகாப்பதற்காகவே இத்தகைய நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.