பதிவுத் திருமணங்கள் தொடர்பில் இலங்கையில் வெளியான தகவல்

02.06.2021 09:10:15

இலங்கையில் பதிவுத் திருமணங்களுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் அமுலாகும் வகையில் பொது திருமணப்பதிவு சட்டத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பதிவாளர் அலுவலகம் அல்லது வெளியிடங்களில் விவாகப் பதிவு செய்வதற்கான கட்டணம் 100 ரூபாயில் இருந்து 120 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படுகின்ற திருமணத்துக்கான கட்டணம் 750 ரூபாயில் இருந்து 900 ரூபாயாகவும், விவாகப் பதிவுக்கான பதிவாளர் உறுதிச்சான்றை வழங்குவதற்கான கட்டணம் 100 ரூபாயில் இருந்து 120 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது.