கமல்ஹாசன் , பாரதிராஜா சந்திப்பு ....

02.03.2023 16:00:00

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனும் இயக்குனர் பாரதிராஜாவும் சந்தித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது.