டோக்கியோ ஒலிம்பிக்கில் ரஃபேல் நடால் விளையாடுவது சந்தேகம் !

13.05.2021 12:41:23

 

ஸ்பெயினின் முன்னணி டென்னிஸ் வீரரான ரஃபேல் நடால், டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நடால் கூறுகையில், ‘டோக்கியோ ஒலிம்பிக்கில் நான் பங்குகொள்வது நிச்சயமற்றது. இந்த கோடையில் டோக்கியோ விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கலாமா என்று இன்னும் முடிவு செய்யவில்லை. நான் சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவெடுப்பேன்’ என கூறினார்.

34 வயதான நடால் 2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக்கில் இரட்டையர் பிரிவிலும் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நான்கு முறை சம்பியனான செரீனா வில்லியம்ஸ் ஜப்பானின் கெய் நிஷிகோரி மற்றும் நவோமி ஒசாகா, ஆகியோர் இத்தொடரில் விளையாடுவது குறித்து சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

ஜூலை 23ஆம் ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படும் டோக்கியோ ஒலிம்பிக்கை 60 – 80 சதவீத ஜப்பானிய மக்கள் இரத்து செய்ய அல்லது ஒத்திவைக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தனர்.