அவுஸ்ரேலியா அணி 54 ஓட்டங்கள் முன்னிலை !

17.01.2021 10:07:30

அவுஸ்ரேலியா மற்றும் இந்தியா அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

குறித்த தொடரின் இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்ரேலியா அணி எவ்வித விக்கெட் இழப்புகளும் இன்றி 21 ஓட்டங்களை பெற்று 54 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

குறித்த போட்டியில் தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 369 ஓட்டங்களை குவித்தது.

அவ்வணி சார்பாக லாபுசாக்னே 108 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள இந்திய அணி சார்பாக பந்துவீச்சில் நடராஜன் மற்றும் தாகூர் ஆகியோர் 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

இந்நிலையில் பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்தியா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 336 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக முதலாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய வொஷிங்டன் சுந்தர் 62 ஓட்டங்களையும் தாகூர் 67 ஓட்டங்களையும் பெற்று அணிக்கு வலுச்சேர்த்தனர்.

பந்துவீச்சில் அவுஸ்ரேலிய அணி சார்பாக ஹசில்வுட் 5 விக்கெட்களையும் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இந்நிலையில் மூன்றாவது நாளின் இறுதி நேரத்தில் 31 ஓட்டங்கள் முன்னிலையுடன் அவுஸ்ரேலியா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.