அமெரிக்காவின் டென்வரில் பயணித்துக்கொண்டிருந்த விமானத்தின் சில பாகங்கள் வீடுகளின் மேல் விழுந்த சம்பவம்

22.02.2021 08:32:28

அமெரிக்காவின் டென்வரில் பயணித்துக்கொண்டிருந்த விமானத்தின் சில பாகங்கள் வீடுகளின் மேல் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

241 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த பொயிங் 777 விமானத்தின் பாகங்களே வீடுகளின் மேல் விழுந்துள்ளன.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் இயந்திரமொன்று இயங்கமறுத்தது எனினும் விமானம் பாதுகாப்பாக எவருக்கும் காயமின்றி தரையிறங்கியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானம்புறப்பட்டவுடன் பாரியசத்தமொன்று கேட்டது என பயணிகள் தெரிவித்துள்ளனர்.

யுனைட்டட் எயர்லைன்சின் விமானம் புறபட்டவேளை அதன் வலதுபக்க இயந்திரம் இயங்கமறுத்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானம் வேகமாக குலுங்கதொடங்கியது தரையை நோக்கி விமானம் சென்றுகொண்டிருந்தது என பயணியொருவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் உயிரிழந்தால் எங்களை அடையாளம் காண்பதற்காக எங்களிடமிருந்து ஆவணங்களை தயாராகவைத்திருந்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை விமானத்தின் பாகங்கள் வீடுகள் மேல் விழுந்தன புரூம்பீல்டை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

அது கீழே விழத்தொடங்கியவேளை நாங்கள் எங்களை பாதுகாத்துக்கொண்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமானத்தை நாங்கள் பார்த்தோம்,பாரிய சத்தமொன்று கேட்டது வானில் கரும்புகைமண்டலம் காணப்பட்டது விமானத்தின் பாகங்கள் கீழே விழத்தொடங்கின என மற்றொருவர் தெரிவித்துள்ளார்