சீனா ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்கிறது

26.02.2021 09:00:00

 

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கையினை சீனா மேற்கொள்ளுமென அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் வாங் யி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வெளியுறவு அமைச்சருடன் இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உடன்படிக்கையை இலங்கை மறுபரிசீலனை செய்ய முற்படுவதாக வெளியான தகவல்களுக்கு இடையே சீனாவின் வெளியுறவு அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை கடந்த 2019ஆம் ஆண்டு பதவியேற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விரைவில் இந்த உடன்படிக்கையை மீள்பரிசீலனை செய்யச் சீனாவுடன் பேச்சு நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் துறைமுகத்தை 99 வருடக் குத்தகைக்கு வழங்கியமையை கண்டித்தே ஜனாதிபதி இத்தகையதொரு கருத்தினை வெளியிட்டிருந்தார்.