சமிந்த வாஸ் இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமனம் !

19.02.2021 10:09:25

 

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

எதிர்வரும் மேற்கிந்தியத்தீவுகள் சுற்றுப் பயணத்தின் போது, அவர் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் பதவியை தொடருவார்.

முன்னதாக தனிப்பட்ட காரணங்களைக் கூறி வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய டேவிட் சாகருக்கு பதிலாக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

47 வயதான சமிந்த வாஸ், இலங்கை அணிக்காக 111 டெஸ்ட் போட்டிகளில் 355 விக்கெட்டுகளையும் 322 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 400 விக்கெட்டுகளையும் ஆறு ரி-20 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.

அடுத்த மாத ஆரம்பத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி, மூன்று ரி-20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.