இந்தியா- இங்கிலாந்து இன்று மோதல்! முதல் வெற்றி யாருக்கு ?

23.03.2021 09:40:22

 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புனே மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் நேரப்படி மதியம் 1.30 மணிக்கு இப்போட்டி நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் இந்தியா அணிக்கு விராட் கோஹ்லிக்கும் இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட்டும் தலைமை தாங்கவுள்ளனர்.

இரு அணிகளும் இதுவரை 100 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்தியா அணி 53 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி 42 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.