இரு மீனவர் சடலங்களில் ஒன்று யாழ்.குருநகரைச் சேர்ந்தவருடையது!

21.01.2021 09:09:02

இலங்கை கடற்பரப்பினுள் ஊடுருவிய சமயம் இலங்கைக் கடற்படையினரின் டோராவுடன் மோதி உயிரிழந்த நான்கு மீனவர்களில் ஒருவர் யாழ்ப்பா
ணம் குருநகரைச் சேர்ந்தவர் எனக் கண்டறியப்பட்டுள்ளதோடு மீட்
கப்பட்ட உடல்களில் ஒன்று அவருடையது எனவும் தெரியவருகின்றது.

இலங்கைக் கடல் எல்லைப் பரப்பில் திங்கட்கிழமை இரவு மீன்பிடியில் ஈடுபட்ட
இந்திய மீனவர்களுக்குச் சொந்தமான ஒரு ட்ரோலர் படகையும் அதில் பயணித்த
நான்கு மீனவர்களையும் காணவில்லை என இந்திய மீனவர்கள் தெரிவித்திருந்
தனர்.

இவ்வாறு காணாமல்போன படகு இலங்கை கடற்படையினரின் கப்பலில்
மோதியிருக்கலாம் என்ற சந்தேகமும் காணாமல்போன இந்திய மீனவர் படகில்
இருந்த மீனவர்கள் நால்வருக்கும் என்ன நடந்தது என்ற அச்சம் நிலவிய சமயம்
நேற்று மதியம் இலங்கை கடற்படையினரால் இருவரது சடலங்கள் மீட்கப்பட்டன.

இவ்வாறு மீட்கப்பட்ட இரு சடலங்களும் செல்வம் – செந்தில்குமார் (வயது
35) மற்றும் சாம்சன் டர்வின் (வயது 28) ஆகியோருடையவாக இருக்கலாம் எனக்
கருதப்படுகின்றது. படகில் பயணித்த நான்கு மீனவர்களில் ஒருவரான சாம்சன்
டர்வின் (வயது 28) என்பவர் இலங்கையில் இடம்பெற்ற போரின் காரணமாக
2009ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து தமிழ் நாட்டில்
மண்டபம் முகாமில் தங்கியுள்ள நிலையில் குடும்ப வறுமை காரணமாக
கூலித் தொழிலுக்காக மீன்பிடியில் ஈடுபட்டவர் என்பது தற்போது தெரிய வந்
துள்ளது.

மீட்கப்பட்ட இரு சடலங்களும் பி.சி.ஆர். பரிசோதனைக்காகவும் அதன் பின்ன
ரான பிரேதப் பரிசோதனைக்காகவும் யாழ். போதனா வைத்தியசாலையில்
ஒப்படைக்கப்பட்டன. அதேநேரம் காங்கேசன்துறைப் பொலிஸார் ஊடாக நீதிவானின் கவனத்துக்கு இவ்விடயம் கொண்டு செல்லப்படவுள்ளது. நீதிமன்றின் உத்தரவிற்கமைய அடுத்த கட்டப் பணிகள் இடம்பெறும்.