இறுதி போட்டியில் பும்ரா விளையாடமாட்டார்!

13.01.2021 11:39:08

 

இந்தியா மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையில் பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீட் பும்ரா விளையாடமாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்ரேலியவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வீரர்கள் ஷமி, உமேஷ் யாதவ், ராகுல் மற்றும் ஜடேஜா உள்ளிட்டோர் தொடர்ந்து காயமடைந்து போட்டியில் இருந்து விலகியுள்ளனர்.

இந்நிலையில் வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா இறுதி டெஸ்ட்டில் விளையாட மாட்டார் எனவும், தொடர்ந்து பந்துவீசினால் இந்தக் காயம் மேலும் பெரிதாகும் ஆபத்து இருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

இருப்பினும் பும்ராவிற்கு மாற்றாக, ஷர்துல் தாகூர் அல்லது நடராஜன் அணியில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.